Mettur Chemicals Colony - A Few Sad Memories
Sethu Swamy Chander (Chander)
காலனி D line வாழ்க்கை எனக்கு மிக பசுமையானது. ஆனந்தமாக துள்ளி வளர்ந்ததோடில்லாம சிறுவயதில் போட்ட/ போடற சின்ன சின்ன சண்டைகளோட வளர்ந்த பருவம். எதுவும் மனதை விட்டு அகலவில்லை.
அதே போல் டி லைனில் இருந்தப்ப பார்த்த சில மரணங்களும் மனதை விட்டு அகலவில்லை.
நான் பிறந்து ஒரிரு வயது இருக்கும் போதே அப்பாவின் அண்ணா கிச்சா பெரியப்பா இறந்து டி13 வாசல் திண்ணையில் வைத்திருந்தபோது நான் அம்மா காலை கட்டிக்கொண்டு நிற்பது தெரிகிறது.
ஐந்தாறு வயது இருக்கும் போது D15ல் கம்பௌண்டர் வெங்கட்ராமன் மாமா இறந்தது. ஜெயராமன் அண்ணாவும் சுந்தரராமன் அண்ணாவும் முன் செல்ல, அவர் பேரன் தினேஷ் நெய்பந்தம் பிடிக்க, காலனி் மேல்லைன் நாரயணன் மாமா, சித்தையர் பக்கத்து வீடு வெங்கட்ராமன் அண்ணா ஆகியோர் தூக்கிச் செல்வதை நானும் பக்கத்து வீட்டு கே கே ஜெயஶ்ரீயும் எங்கள் சிறுவயதில் அவள் வீட்டில் கீழே உட்கார்ந்து கொண்டு ஒரு பயம் கலந்த உணர்வுடன் அவர்கள் எடுத்துச் செல்வதைப் பார்த்தது.
இன்னொன்று செக்யூரிட்டி ஆபீசர் ராமராவ் மாமாவுடையது. வெளியே ஆஸ்பத்திரியில் மரணமடைந்த அவரை வீட்டிற்கு சாகர் கொண்டு வரும் போது அவரை காரில் இறக்கும்போதே சாகர் உரக்க அப்பா போயிட்டார்ன்னு வீதியிலிருந்து உஷா லல்லி பேரைச் சொல்லி அலறியது இன்னும் மனதிலிருக்கிறது.
அதிகம் பாதித்தது மார்க்கெரெட்டோடது. என்னை விட இரண்டு வயது பெரியவள். எனக்கும் செல்வனுக்கும் மூனு நாலு வயசுலேர்ந்து ஏழெட்டு வயது வரை சண்டை வரும் போதெல்லாம் எங்களுக்குள் மத்தியஸ்தம் அவள் தான் செய்வாள்.
சகாயோட எனக்கு அதிகம் சண்டை வராது. செல்வத்தோட இரண்டு மூனு நாளைக்கொரு்தடவை ஏதோ ஒரு சில்லறை சண்டை வந்துடும். நானும் அவனும் ஒரே வயசு, சகாய் சின்னவன். அவங்க வீட்டு திண்ணையிலோ, அல்லது அவங்க வீட்டு சைடுல அவங்க வீட்டு வாசல்ல, அரசமரத்துல போய் விளையாடுவோம்.
சகாயோட சண்டை வராது. ஆனால் செல்வம் ஒரு சின்ன சண்டை வந்தா கூட போதும், நேரா மார்கெரட் கிட்ட போய் சொல்லிருவான். அவள் உடனே கூப்பிட்டு அட்வைஸ். சமாதானமாயிடுவோம் அங்கயே விளையாட்டு தொடரும். அடிதடி நடந்தாலும் கூப்பிட்டு சொல்லுவா ஏண்டா இப்படி அடிச்சுக்றீங்கம்பாள்!
ஒரு தடவை சண்டையில செல்வம் என்னை நீ போய் ஜெயஶ்ரீயைக் கல்யாணம் பண்ணிக்கன்னு சண்டையிலத் திட்ட, நான் அவன்ட்ட நீ போய் மார்கரெட்டைக் கல்யாணம் பண்ணிக்கன்னு திட்ட, அவன் நேரா போய் மார்கரெட் கிட்ட சொல்லிட்டான்.
அவ்வளவு தான். எப்போதும் போல் அவள் கூப்பிட்டு, அவளும் ஏழாவதோ என்னவோ தான் படித்துக் கொண்டிருந்தாள், என்னிடம் எப்படிடா அக்கா தம்பி கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு அவங்க வீட்டு திண்ணையில கேட்க, ஏண்டா நீங்க சண்டை போடறதுக்கு இதெல்லாமாட பேசுவிங்க, இதுக்கு குச்சி எடுத்து அடிச்சுகிட்டீங்கன்னா பரவாயில்லைடா, சின்ன வயசுல எதைச் சொல்றது கூடத் தெரியாம சண்டை போடறீங்கடான்னாள். யாருக்குத் தெரியும் அந்த வயசுல எப்படி சண்டை போடனும்ன்னு.
அவள் திடீர்ன்னு இறந்தது எனக்கு பெரிய இழப்பு. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் ஆறுதலாக இருப்பாள், எடுத்துச் சொல்வாள். எதனால் அவள் மரணம்ன்னு தெரியலை, இன்னும் அதிர்ச்சியாக இருக்கு. பிறகு ரீட்டா அக்காவும் ஸ்டெல்லா அக்காவும் அவள் தலைமாட்டுல உட்கார்ந்து அவள் தலையிலிருந்து வந்த பேனை ஒவ்வொன்னா நசுக்கி கிட்டே இருந்தோம்ன்னு சொன்னதைக் கேட்டது இன்னும் அதிர்வாக இருந்தது. ஒட்டு மொத்த காலனியே அவள் இறுதி ஊர்வலத்துக்குப் போச்சு. அந்த ஊர்வலத்தை அரசமரம் வரை சென்று பார்த்து அங்கயே நின்று விட்டது மனதை விட்டு அகலவில்லை.
அதே போல் பத்தாவது படிக்கும் போது T G ரங்கன் மாமாவோட மனைவி, வீரராகவன் கேசவன் மீராவோட அம்மா போனது. நந்து அம்மா ஆனந்தி மாமி அவங்க வாயில கொஞ்சம் கொஞ்சமாக உத்திரணியில நீர் ஊற்றியதும் மறக்கவில்லை.
சிலவற்றை அசைபோடும் போது மனம் கனக்கிறது.
Varadarajan PB
Sethu Seamy Chander- நீ குறிப்பிட்ட அத்தனை நிகழ்வுகளையும் நானும் தாண்டி வந்தவன். நினைக்கும் போது சோகமாக உள்ளது. சகாய் வீட்டு பக்கத்தில் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் காலை சூர்யநமஸ்காரம் செய்துகொண்டே ப்ராணணை விட்டது ....இது போல் பல பல.என்ன அந்த வயதில் சாவு என்றாலே பயப்படுவோம்.
Sahayaraj Antony
chander பழைய நிகழ்வுகளை இன்னும் மறக்காமல் இருப்பது பெரிய விஷயம் super
Jayakumar Narayana Rao
அந்த நாள் நினைவுகள் மனதைத் விட்டு அகலாத நிகழ்வுகள்.
Radhika Ramakrishnan
We too have many such incidents in our seshasayee Nagar Colony which can't be forgotten. The people who worked in MCIC and in Chemplast plant 1 and plant 3 have some Rinanubandham
Apart from religions and castes we all lived a beautiful life which I never experienced since I left Mettur in 1996.
M S Raju
Radhika Ramakrishnan
Very much sure
Your father g Ramakrishna n moved and mingled in oneness with all category of mcic colony as a whole… See more
Uma Seshadri
Hi to everyone
I remembered all these incident
Reeta&stella are our friends,we stayed in C3,
I know varadarajan,sridar&kalyani,u
U stayed in C 6 , I Know venkatraman's family ,all daughters are in bangalore,baby,hema ,vijaya.Recently 2 sons of venkatraman passed away.
Sethu i kniow ur parents very well,sethuraman&parvatha mami,ur brother thiagu.ur mother is very goodlooking.so all these are nice memories in my mind.tks for sharing
Sethu Swami Chander
பேபி, ஹேமா அக்காக்களுக்கு நடுவில் சச்சு அக்கா, கடைசி ஜானகி.
Uma Seshadri
Sunder raman is my brother gopu's close friend,usha&lally is my sister's lakshmi friend
Do u know where is ananthi mamis daughter mangalam
Sethu Swami Chander
Umakka! Recently nandhu shared this picture with me. You all will like it
May be an image of 4 people and indoor
Murali K Rao
Margret..I think my set...
Sethu Swami Chander
ஆமாம்
Ravi Ramaswamy
In addition to death caused by natural illnesses, there were few incidents related to deaths caused by drowning, suicidel and factory accidents. These were all part of Colony life. Everyday was different.
Sethu Swami Chander
Yes.
Sethu Swami Chander one of the interesting person in yester year Colony's life Mr Childambaram's mother whose house next to line pillar temple in E Qtrs.
Sethu Swami Chander
Yes anna. Krishnan is in touch with us now regularly. He will respond to this message if he sees.
Sethu Swami Chander
Krishnan is the second son of chidamabaram mama who is older to me by three years, very jovial and friendly.
Krishnan is the second son of chidamabaram mama who is older to me by three years, very jovial and friendly.
Ravi Ramaswamy
Sethu Swami Chander why don't you compile the events, write and publish a book on Colony's life from your lenses. Shaha is a publisher and he can help you.
Suggestion
Sethu Swami Chander why don't you compile the events, write and publish a book on Colony's life from your lenses. Shaha is a publisher and he can help you.
Suggestion
Sethu Swami Chander
Jothi Rathinam D லைனில் கடைசி வீட்டில் பாய்லர் ரத்தினம் (அவரின் மகன்கள் பிரான்சீஸ், ராஜா) அவர்களின் மனைவி வைகுண்ட ஏகாதிசி அன்று காலமானார் எனவே அன்று அவர் நேராக சொர்க்கத்துக்கு போவார் என்று பலரும் பேசிக்கொண்டதால் சொர்க்கம் எப்பொழுது திறக்கும் என்று வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
Ravi Ramaswamy anna! Cheena can write this in better way. I do have a blog where I save my scribblings
Jothi Rathinam D லைனில் கடைசி வீட்டில் பாய்லர் ரத்தினம் (அவரின் மகன்கள் பிரான்சீஸ், ராஜா) அவர்களின் மனைவி வைகுண்ட ஏகாதிசி அன்று காலமானார் எனவே அன்று அவர் நேராக சொர்க்கத்துக்கு போவார் என்று பலரும் பேசிக்கொண்டதால் சொர்க்கம் எப்பொழுது திறக்கும் என்று வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
Sethu Swami Chander
அவர்கள் வீட்டிலும் ஒரு சகாய், பிரபு, நிம்மி (நிர்மலா) மற்றும் மூவர் உண்டு
Giridharan Santhanam
Margaet was a sweet child. I think she was also a bit physically challenged. I think she had an elder brother Charles. No? Margaret's death saddened me a lot. That was the second time death reared its ugly head in my life of innocence. Before that, when we were in the 'E' line, our neighbour was Madhuram Maami. She lost her son Ramanan, my friend. He was my age (around 6 years at that time). That was the first time I learnt a few harsh truths about death.
Sethu Swami Chander
Giridharan Santhanam மதுரம் மாமி பையன் வாசு இங்க என் வீட்டிற்கு வந்திருந்தார்
Giridharan Santhanam
Sethu Swami Chander ஓ! ரமணனின் அண்ணன் வாசு. ஞாபகம் இருக்கு..
Comments
Post a Comment